அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
நடிகர் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் ‛இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதற்கு அடுத்து வினோத் இயக்கத்தில் தனது 233வது படத்தில் நடிக்க போகிறார். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகின. தற்போது அமெரிக்காவில் கமல் முகாமிட்டுள்ளார். இந்த பயணத்தின்போதே தனது அடுத்த 233வது படத்திற்கான ஆயத்த பணிகளிலும் தீவிரமாகி உள்ளார். அதாவது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் கமல்ஹாசன் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார். பல்வேறு ரக மாடல் துப்பாக்கிகளில் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் உள்ளார். தோட்டாக்கள் தெறிக்க தெறிக்க இந்த வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ உடன் ‛தைரியம் மற்றும் துப்பாக்கிகள்' என கேப்ஷன் கொடுத்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதை வைத்து பார்க்கையில் இந்த படம் அதிரடி ஆக் ஷன் கலந்த படமாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. முன்னதாக இந்தபடம் விவசாயம் தொடர்பான கதை என தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.