டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? |
காதல் வதந்தி, திருமண வதந்தி என தமிழ் சினிமாவில் அடிக்கடி ஏதாவது ஒரு வதந்தி பரவும். அதற்கெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் உடனே விளக்கம் கொடுக்க மாட்டார்கள். அந்த வதந்திகளில் ஒன்றிரண்டு உண்மையாக நடக்கவும் செய்யும்.
45 வயதைக் கடந்தாலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பவர் நடிகர் விஷால். அவரைப் பற்றி அடிக்கடி வதந்திகள் வருவதுண்டு. இதற்கு முன்பு நடிகை வரலட்சுமியுடன் அவர் காதலில் இருக்கிறார் என்றும் லிவிங் டு கெதர் ஆக ஒன்றாகவே வாழ்கிறார்கள் என்றும் வதந்திகள் வந்தன. அதன்பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்றும் சொன்னார்கள். அதற்குப் பின்னர் விஷாலும், லட்சுமி மேனனும் காதலிக்கிறார்கள் என்று வதந்தி வந்தது.
கடந்த சில தினங்களாக இருவருக்கும் விரைவில் திருமணம் என்று செய்திகள் வந்தன. அதற்கு உடனடியாக விளக்கம் கொடுத்துள்ளார் நடிகர் விஷால்.
“பொதுவாக என்னைப் பற்றிய எந்த ஒரு தவறான செய்திகளுக்கும், வதந்திகளுக்கும் நான் பதிலளிப்பதில்லை. அது பயனற்றது என நான் நினைப்பேன். ஆனால், இப்போது லட்சுமி மேனனுடன் எனக்கு திருமணம் என்று வதந்தி பரவி வருவதால் இது முற்றிலும் உண்மையற்ற ஆதாரமற்ற செய்தி என மறுக்கிறேன்.
இதில் சம்பந்தப்பட்டிருப்பவர் முதலில் நடிகை என்பதை விட ஒரு பெண்ணாக இருப்பதே என்னுடைய பதிலுக்கான காரணம். ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு அவருடைய இமேஜைக் கெடுக்கிறீர்கள்.
ஆண்டு, தேதி, நேரம் மற்றும் எதிர்காலத்தில் நான் யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பதை டி கோட் செய்வது ஒரு பெர்முடா முக்கோணம் அல்ல. நம்பிக்கை உணர்வு மேலோங்கட்டும். நேரம் வரும் போது எனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு தன்னைப் பற்றி பல வதந்திகள் வந்திருந்தாலும் முதல் முறையாக அப்படிப்பட்ட வதந்திகளுக்கு விஷால் விளக்கம் கொடுத்துள்ளார்.