சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
பிரேக்கிங் பாயிண்ட பிக்சர்ஸ் நிறுவனத்தின் ‛யாதும் அறியான்' திரைப்படத்தின் முதல்பாடலான ‛மலரே... தினமே...' நேற்று சரிகம தமிழ் யுடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.
காதலும் இசையும் கலந்து மனதை கொள்ளையடிக்கும் பாடலாக வெளியாகியுள்ளது. எஸ்.கே.சித்திக் பாடலை இயற்ற, சூப்பர் சிங்கர் அருள்பிரகாசம் மனதை மயக்கும் குரலில் பாடியுள்ளார். அழகான வரிகள், ஆழமான கருத்து என்ற அடிப்படையில் அமைந்துள்ள இந்தப்பாடலை மனம் பறக்கும் அளவிற்கு இசையமைப்பாளர் தர்மபிரகாஷ் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் அமோக வரவேற்பு சரிகம யுடியூப் சேனலில் குவிகிறது.
இந்தப் படத்தை இயக்குனர் கோபி இயக்க, முதன்மை ரோலில் அறிமுக நடிகர் தினேஷ் நடிக்கிறார். அப்புகுட்டி, தம்பி ராமையா, கே.பி.ஓய் ஆனந்த பாண்டி, ப்ரணா, சியாமல் ஆகியோர் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் கதையில் உருவாகி உள்ள இந்த படத்தின் டீசர் கடந்தவாரம் வெளியானது. டீசர் ஹாலிவுட் ஸ்டைலில் இருப்பதாக ரசிகர்கள் பலர் கருத்து பதிவிட்டனர். அடுத்தவாரம் படத்தின் டிரைலரும், இந்த மாதம் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
மலரே பாட்டு லிங்க்... : https://www.youtube.com/watch?v=BH0Qtb9YR7U