‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் திரைப்படப் பணிகளுக்கு புதிய தொழிலாளர்களை தேர்வு செய்து வரும் நிலையில் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை இல்லாதவர்கள் சினிமாவில் நடிக்க முடியாது என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
திரைப்படத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களிலும் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்குவது போல, நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே திரைப்படங்களில் நடிப்பதற்கான முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் திரைப்படங்களில் கேமரா முன்நின்று நடிக்கும் நடிகர்-நடிகைகள், துணை நடிகர்-நடிகைகள் அனைவருமே நடிகர் சங்க உறுப்பினர் அட்டை பெற்றவராகத்தான் இருக்கவேண்டும்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தொழில்முறை ஆயுள் உறுப்பினராக சேருவதற்கு சேர்க்கை கட்டணமாக வசூலிக்கப்படும் தொகை, மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள உறுப்பினர்களின் மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவிகளுக்கும், ஈமச்சடங்குக்கும் செலவிடப்பட்டு வருகிறது.
இதுவரை சங்கம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் நடித்து கொண்டிருப்பவர்களிடம் அதன் பயனை எடுத்துரைத்து, வருகிற 20ம் தேதிக்குள் உறுப்பினர் அட்டை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நடிகர், நடிகைகளின் மேலாளர்கள், தயாரிப்பு நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் விஷால் கூறியுள்ளார்.