சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
'96' படத்தில் பிரேம்குமாரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிருத்விராஜ் ராமலிங்கம் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் 'குட் டே'. நியூ மாங்க் பிக்சர்ஸ் சார்பில் அவரே தயாரித்துள்ளார். காளி வெங்கட், 'மைனா' நந்தினி, 'ஆடுகளம்' முருகதாஸ், பகவதி பெருமாள், வேல.ராமமூர்த்தி, போஸ் வெங்கட் நடித்துள்ளனர். என்.அரவிந்தன் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.
தொலைக்காட்சி தொடர் பிரபலமான மைனா நந்தினி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் புகழ் பெற்றார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். இடையில் பல படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ளார். சில வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார்.
படம் குறித்து பிருத்விராஜ் ராமலிங்கம் கூறியதாவது: ஆடை நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நாயகன், மது போதையில் இருக்கும்போது, ஒரு இரவில் சந்திக்கும் பல்வேறு சம்பவங்களை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது.
இரவின் தொடக்கத்தில் சூழ்நிலை கைதியாக இருந்த ஒருவன், விடியற்காலையில் எப்படி மனிதனாக மாறுகிறான் என்பது திரைக்கதை. ஒரு மனிதன் தன்னைத்தானே உணர்வது மையக்கரு. இப்படத்தை இண்டர்கட் ஷாட்டே இல்லாமல் படமாக்கி இருப்பது புதுமை. வரும் 27ம் தேதி வெளியாகிறது. என்றார்.