ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
1980களின் நடுப்பகுதியில் விஜயகாந்தும், தியாகராஜனும் ஆக்சன் ஹீரோக்களாக வலம் வந்து கொண்டிருந்தார்கள். இருவரையும் இணைத்து ஒரு பெரிய ஆக்சன் படத்தை தயாரிக்க முன் வந்தது தேவர் பிலிம்ஸ். இருவரும் தனித்தனி ஹீரோக்களாக நடித்துக் கொண்டிருந்தாலும் அன்றைக்கு தேவர் பிலிம்ஸ்க்கு இருந்த சில பொருளாதார சிக்கல்கள் காரணமாக இணைந்து நடிக்க முன்வந்தார்கள்.
1984ம் ஆண்டு தியாகராஜன் இயக்கத்தில் விஜயகாந்த், நளினி நடித்து வெளியான படம் 'நல்ல நாள்'. இப்படத்தில் இரண்டு பேருமே ஹீரோக்கள் தான். ஆனால் அவர்கள் அடிக்கடி மோதுவதற்கான காரணம் இருந்தது. தனது தந்தையை கொன்ற தியாகராஜனின் தந்தையை கொன்று விட்டு சிறுவர் செயலுக்கு சென்று விடுவார் விஜயகாந்த். தனது தந்தையை கொன்ற விஜயகாந்தை பழிவாங்க அவர் விடுதலை நோக்கி காத்திருப்பார் தியாகராஜன்.
விஜயகாந்தின் தங்கை நளினியை தியாகராஜன் காதலிப்பார், விஜயகாந்த் விஜியை காதலிப்பார். விஜயகாந்த்தும் தியாகராஜனும் ஒருவரை ஒருவர் பழி தீர்க்க திட்டமிடுவார்கள், செயல்படுவார்கள். அதற்கு இரண்டு பேருக்குமே நியாயமான காரணம் இருந்ததுதான் திரைக்கதையின் சிறப்பு.
எல்லா காட்சிகளிலுமே விஜயகாந்துக்கும் தியாகராஜனுக்கும் சம பங்கு இருந்தது. யாருமே அடக்க முடியாத ஒரு குதிரை தியாகராஜன் அடக்குவார். அதேபோல விஜயகாந்த் ஒரு புலியை அடக்குவார். இந்த இரு காட்சிகளுமே அப்போது பெருமையாக பேசப்பட்டது. படமும் ஆக்சன் காட்சிகளுக்காகவே வெற்றி பெற்றது.
இளையராஜா இசையமைத்து இருந்தார். இந்தப் படம் ஹாலிவுட்டில் வெளிவந்து கொண்டிருந்த கௌபாய் படங்களில் சாயலில் இருந்ததால் மேற்கத்திய இசையின் வடிவத்திலேயே இளையராஜா பின்னணி இசை அமைத்திருந்தார். தேவர் பிலிம்ஸ் வெற்றி படங்களில் இந்த படமும் இணைந்தது.