சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
டிராகன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரதீப் ரங்கநாதன் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 'டியூட்' படத்தில் நடித்துள்ளார். இந்தாண்டு தீபாவளிக்கு படம் வெளியாகிறது. பிரதீப்பிற்கு ஜோடியாக பிரேமலு நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். சரத்குமார், ஹிருது ஹாரூன், டிராவிட் செல்வம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். சாய் அபயன்கர் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை ஓடிடி நிறுவனம் ரூ.25 கோடிக்கு கைப்பற்றியதாக தகவல் கூறப்படுகிறது. இதுதான் பிரதீப் படங்களில் அதிக விலைக்கு வியாபாரம் ஆன படம் என்பது குறிப்பிடத்தக்கது.