மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு | ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! |
தெலுங்கில் உப்பெனா என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கிர்த்தி ஷெட்டி. இந்த படத்தில் விஜய் சேதுபதி அவரது தந்தையாக நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் அதன்பிறகு அவருக்கு நான்கு படங்கள் புக்காகின. அதில் இரண்டு படங்கள் ஹிட் அடித்த நிலையில், அதையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் ராம்பொத்தனேனிக்கு ஜோடியாக நடித்த தி வாரியர் படம் வரவேற்பை பெறவில்லை.
அந்த படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நிதினுக்கு ஜோடியாக கிர்த்தி ஷெட்டி நடித்து கடந்த 12ம் தேதி வெளியாகியுள்ள மச்சேர்ல நியோ ஜெகவர்கம் என்ற படமும் தோல்வி அடைந்து விட்டது. இப்படி இரண்டு படங்கள் அடுத்தடுத்து கிர்த்தி ஷெட்டிக்கு தோல்வியாக அமைந்து விட்ட நிலையில் அடுத்தபடியாக தெலுங்கில் நடித்துள்ள ஆ அம்மை குறிஞ்சி மீக்கு செப்பளி என்ற படத்தை பெரிய அளவில் தான் எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் கிர்த்தி ஷெட்டி. இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. அதோடு, தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான், நாகசைதன்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் படத்திலும் தற்போது கிருத்தி ஷெட்டி நடித்து வருகிறார்.