தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் | கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா | 500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... | மீண்டும் கிசுகிசு : அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி காதலா? | தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… | ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! |
'ஜெயிலர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் நெல்சன் இயக்கும் 'ஜெயிலர்-2' படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வந்தது. அங்கு படப்பிடிப்பு நடைபெற்றபோது சில மலையாள நடிகர்கள் மற்றும் அங்குள்ள அமைச்சர்கள் என பலரும் ரஜினியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்கள். அதோடு, ரஜினி கேரளா செல்லும்போது ரசிகர்கள் சாலையில் இருபுறமும் நின்று அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தார்கள்.
இந்நிலையில் தற்போது கேரளாவில் 'ஜெயிலர்-2' படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பி இருக்கிறார் ரஜினி. அப்போது விமான நிலையத்தில் அவர் மீடியாக்களை சந்தித்தபோது, ''ஜெயிலர்-2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் என்று நினைக்கிறேன்'' என தெரிவித்துள்ளார் ரஜினி. அதையடுத்து கூலி படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ''அந்த படம் ரொம்ப நல்லா வந்திருக்கு'' என்று தெரிவித்துவிட்டு புறப்பட்டு செல்கிறார் ரஜினி.
இந்த ஜெயிலர்-2 படத்தில் ரஜினியுடன் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், யோகி பாபு மற்றும் கெஸ்ட் ரோலில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் மீண்டும் நடிக்கும் நிலையில், தெலுங்கு நடிகர் பால கிருஷ்ணாவும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இவர்கள் தவிர, எஸ்.ஜே.சூர்யா, பஹத் பாசில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.