ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தற்போது கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடிப்பில் 'தக்லைப்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார் மணிரத்னம். ஜூன் 5ம் தேதி இந்த படம் திரைக்கு வரப்போகிறது. இப்படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சுகர் பேபி' என்ற இரண்டாவது பாடல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த பாடலில் திரிஷா நடித்துள்ளார். மேலும், தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகர் நவீன் பாலி ஷெட்டியை வைத்து ஒரு காதல் படத்தை மணிரத்னம் இயக்க போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், தக்லைப் படத்தின் புரமோஷன் பணியில் ஈடுபட்டு வரும் மணிரத்னம் அடுத்த படம் குறித்து கூறுகையில், ''அடுத்தபடியாக ஓகே கண்மணி படத்தை போன்று காதல் கதையில் முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் இன்னும் முடியவில்லை. அதையடுத்து அந்த கதைக்கு ஏற்ற மாதிரி நடிகர்கள் வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் சரியாக அமைந்தால் அடுத்தபடியாக அந்த படத்தை இயக்குவேன். அப்படி இல்லை என்றால் அந்த படத்தை பின்னர் இயக்குவேன்'' என்று தெரிவித்திருக்கிறார் மணிரத்னம். இதன்மூலம் புதுமுகங்களை வைத்து ஒரு காதல் படத்தை இயக்க மணிரத்னம் திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.




