ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன், 'சகாப்தம்' படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 'மதுரை வீரன்' படத்தில் நடித்தார். அதன்பின் அவர் நடித்து முடித்துள்ள படம் 'படை தலைவன்'. முக்கிய வேடத்தில் கஸ்தூரி ராஜா, எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். அன்பு இயக்கி உள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் சிறப்பு தோற்றத்தில் விஜயகாந்த்தை இப்படத்தில் கொண்டு வந்துள்ளனர்.
யானையை பின்புலமாக வைத்து இப்படம் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்தில் யானை பாகனாக சண்முக பாண்டியன் நடித்துள்ளார். படத்தின் டிரைலரும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படம் முதலில் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்தனர். அந்த சமயத்தில் பல படங்கள் வெளியானதால் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தனர். அதன்படி, மே 23 (நாளை) ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர்.
இந்த நிலையில் போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் மீண்டும் பட வெளியீட்டை தள்ளிவைத்துள்ளனர். இது தொடர்பாக சண்முக பாண்டியன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: படை தலைவன் திரைப்படம் மே 23ல் வெளியாக இருந்த நிலையில், தியேட்டர் ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக, பட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதியை விரைவில் உறுதி செய்து, அறிவிக்க உள்ளோம். இந்த இடையூறுக்கு மன்னிக்கவும், உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.