விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' |
ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய 'ஆயுத எழுத்து, மற்றும் பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்திருந்தார் திரிஷா. இதில் பொன்னியின் செல்வனில் அவர் நடித்த குந்தவை கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மணிரத்னம் இயக்கியுள்ள 'தக்லைப்' படத்திலும் நடித்திருக்கிறார் திரிஷா.
இப்படத்தின் டிரைலரில் அவரது கேரக்டர் கவனம் பெற்றது. மணிரத்னம் அளித்த ஒரு பேட்டியில், தக்லைப் படத்தில் திரிஷா நடித்துள்ள வேடம் குறித்து கூறுகையில், ''இந்த படத்தில் திரிஷாவுக்கு ஒரு வித்தியாசமான வேடம். குறிப்பாக பொன்னியின் செல்வனில் இருந்து ஒரு ஆப்போசிட்டான வேடத்தில் அவர் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரது கேரக்டர் குறித்து முதலில் அவரிடம் சொன்னபோது, அது அவரை இம்ப்ரஸ் பண்ணியது. அதனால் இந்த வேடத்தை மிகவும் பிடித்து நடித்திருக்கிறார்'' என்று கூறியுள்ளார் மணிரத்னம். அதனால் தக்லைப் படத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த குந்தவை வேடத்தில் இருந்து ஒரு மாறுபட்ட, அதேசமயம் அதற்கு இணையான இன்னொரு முக்கியத்துவமான வேடத்தில் திரிஷாவும் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது.
தனது கேரக்டர் குறித்து திரிஷா வெளியிட்டுள்ள செய்தியில், ''இந்த படத்தில் எங்களது ஜோடி திரையில் மாயாஜாலமாக இருக்கும். என்றாலும் எனது கேரக்டரை சிலர் விமர்சிக்கவும் செய்வார்கள். இதை எல்லாம் முன்கூட்டியே தெரிந்து கொண்டுதான் இந்த வேடத்தில் நடிக்க நான் ஒப்பந்தம் ஆனேன்'' என்று கூறியுள்ள திரிஷா, இப்படத்திற்காக ''கமலும், மணிரத்னமும் எவ்வளவு புரிதலுடன் இணைந்து செயல்பட்டார்கள் என்பதை அனைத்து நடிகர்களும் பார்க்க வேண்டும். அது கூட ஒரு மாயாஜாலம் போல்தான் இருந்தது'' என்றும் தெரிவித்திருக்கிறார்.