கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி இடையே ஏற்பட்டுள்ள பிரிவு பிரச்னையில் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண், என்னை வசைபாடுபவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் என தெரிவித்துள்ளார் பாடகி கெனிஷா.
நடிகர் ரவி மோகன் தனது காதல் மனைவியான ஆர்த்தியை பிரிந்துவிட்டார். அவரிடம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நடந்து வருகிறது. இதனிடையே பாடகி கெனிஷா உடன் நெருக்கமாக உள்ளார் ரவி மோகன். இதை வைத்து ஆர்த்தி, ரவி மோகன், ஆர்த்தியின் அம்மா, தயாரிப்பாளர் சுஜாதா ஆகியோர் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
ஆர்த்தி வெளியிட்ட கடைசி அறிக்கையில், ‛நாங்கள் பிரிய எங்கள் வாழ்வில் வந்த அந்த மூன்றாவது நபர் தான் காரணம்' என பாடகி கெனிஷாவை மறைமுகமாக சாடியிருந்தார். இதை வைத்து கெனிஷாவை பலரும் வலைதளங்களில் சகட்டுமேனிக்கு திட்டி கருத்து பதிவிட்டுள்ளனர்.
அந்த கருத்துக்கள் சிலவற்றை கெனிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன் உடன், ‛‛நடந்த பிரச்னைகளுக்கு நான் தான் காரணம் என ஒருவர் பொய்யாக பேசுவதை நம்பினால் என்னை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லுங்கள். அங்கு உண்மை தெரியவரும். எனக்கு எதிராக பொய்யான வெறுப்புகளை மட்டுமே பரப்புகிறார்கள். தயவு செய்து அவற்றை நிறுத்துங்கள். நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்.
என்னைப் பற்றி நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், சாபங்கள், பொய்யான குற்றச்சாட்டுகள், உடல்ரீதியான அவமானங்கள், கொலை மிரட்டல்கள் போன்றவற்றால் நான் என்ன மனநிலையில் இருக்கிறேன் என யோசித்து பார்த்து இருக்கிறீர்களா. கர்மா பற்றி பேசுகிறார்கள். ஆனால் பலருக்கு என்ன நடக்கிறது என பார்க்க நான் விரும்பவில்லை. நான் கடவுளை மட்டுமே நம்புகிறேன். இவை எல்லாவற்றையும் அவரிடம் விட்டுவிடுகிறேன். நான் அவரிடம் சரணடைகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.