ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
உலகளவில் பிரபலமான இசையமைப்பாளர் தமிழகத்தை சேர்ந்த ஏஆர் ரஹ்மான். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர். தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை கடந்தாண்டு பிரிவதாக அறிவித்தார். 28 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்களின் பிரிவு திரையுலகினர் மட்டுமல்லாது ரசிகர்கள் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குடும்பத்தினர் உடன் ரஹ்மான் நேரத்தை செலவிட முடியாதது, சாய்ரா பானுவிற்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு என இவர்கள் பிரிவு பின்னணியில் பல காரணங்கள் சொல்லப்பட்டது.
இந்நிலையில் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார். ரஹ்மானிடம் தொகுப்பாளினி டிடி யாரிடமாவது ஒருவரிடம் மன்னிப்பு கேட்க விரும்பினால் யாரிடம் கேட்பீர்கள் என கேட்டார். அதற்கு ரஹ்மான், ‛‛எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கணும். குறிப்பாக என் மகள், மகன் உள்ளிட்ட குடுபத்தினரிடமும், முன்னாள் மனைவி சாய்ராவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். வேலை வேலை என இருந்துவிட்டதால் குடும்பத்தினர் உடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்றார். மேலும் என் உசுரே ரசிகர்கள் தான், அவர்கள் இல்லையென்றால் என் வண்டி ஓடாது" என தெரிவித்தார்.