நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கர்நாடகாவில் அரசு சார்பில் தயாராகி வரும் பிரபலமான மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்தின் விளம்பர தூதராக தற்போது நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு வருடத்திற்கான தூதராக இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இதற்காக அவருக்கு 6.2 கோடி தொகை ஊதியமாக பேசப்பட்டுள்ளதாம். இந்த நிலையில் பல கன்னட அமைப்புகள், மைசூர் சாண்டல் சோப் தூதராக நியமிக்க கன்னடத்திலேயே தகுதியான நடிகர்கள் இல்லையா என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளன. இப்படி எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து கர்நாடக வணிகவரி மற்றும் தொழில்துறை அமைச்சர் எம்.பி பாட்டில் அவர்களை சாந்தப்படுத்தும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கர்நாடக சோப் மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனம் கன்னட திரையுலகின் மீது மிகப்பெரிய மரியாதை கொண்டுள்ளது. நம் கன்னட திரைப்படங்கள் பாலிவுட் படங்களுக்கே சவால் விடும் விதமாக உருவாகி வருகின்றன. மைசூர் சாண்டல் கர்நாடகா அளவில் மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்று வலுவாக இருக்கிறது. அதேசமயம் இதை கர்நாடகாவையும் தாண்டி மற்ற மாநிலங்களிலும் கொண்டு சேர்த்து வலுப்படுத்தும் விதமாகத்தான் நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது வியாபாரத் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவின் மூலமாக தீர்மானிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவே தவிர தன்னிச்சையான முடிவு அல்ல. கர்நாடகாவின் பெருமை என்பது இந்த நாட்டின் ஒரு ஆபரணம் போன்றது” என்று கூறியுள்ளார்.