நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கன்னடத்தில் உருவாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 2022ல் வெளியான ‛காந்தாரா'. ரிஷப் ஷெட்டி இயக்கி, நாயகனாகவும் நடித்தார். நாயகியாக சப்தமி கவுடா நடித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவாகி ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‛காந்தாரா சாப்டர் 1' உருவாகி வருகிறது. அதாவது காந்தாரா படத்தின் முந்தைய கதைகளத்தில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சிலமாதங்களாக நடந்து வருகிறது. இப்படம் வரும் அக்., 2ம் தேதி வெளியீடு என ஏற்கனவே அறிவித்துவிட்டனர்.
இதன் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி நடக்கவில்லை என்றும், ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாகவும் வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால் இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர். இதுதொடர்பாக ரிஷப் ஷெட்டி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛காந்தாரா சாப்டர் 1 படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி சரியாக செல்கிறது. எங்களை நம்புங்கள், வதந்திகளை நம்பாதீர். சொன்னபடி அக்., 2ல் படம் வெளியாகும்'' என தெரிவித்துள்ளார்.