ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

நடிகர் தனுஷ் சமீபத்தில் நடித்து முடித்துள்ள ஹாலிவுட் படம் 'தி கிரே மேன்'. மார்க் கிரேனி என்பவர் எழுதிய 'தி கிரே மேன்' என்ற நாவலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ஆண்டனி ரூஸோ, ஜோ ரூஸோ ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இதில் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரயான் காஸ்லிங், கிறிஸ் ஈவென்ஸ் ஆகியோருடன் இணைந்து தனுஷ் நடித்துள்ளார். ஜூலை 22-ம் தேதி தி கிரே மேன் திரைப்படம் உலகளவில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் கதாபாத்திர பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவிக் சென் என்ற பெயரில் தனுஷ் நடித்துள்ளார்.




