குட் பேட் அக்லி டிரைலர் இன்று வெளியாகிறது | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் நடித்த இன்று நேற்று நாளை படத்தை இயக்கியவர் இயக்குனர் ரவிக்குமார். கால எந்திரத்தை மையப்படுத்தி பேன்டஸி கதையாக இந்த படத்தை உருவாக்கி அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான வெற்றி படமாக கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படமும் இதேபோல பேண்டசி வகையை சேர்ந்த படம் தான். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இயக்குனரும், நாம் தமிழர் என்கிற கட்சியின் தலைவருமான சீமான் மாநாடு பட பூஜையின் போது அதில் கலந்து கொண்ட ரவிக்குமாரிடம் பேச முயற்சித்தபோது அவரை புறக்கணிக்கும் விதமாக அலட்சியமாக நடந்து கொண்டார் என அவர் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து இதுகுறித்து தனது தரப்பிலிருந்து விளக்கம் அளித்துள்ளார் ரவிக்குமார்.
இதுபற்றி அவர் கூறும்போது "நான் சீமான் அவர்களை சந்தித்து பேசியதே இல்லை. அவருக்கு என்னை தெரியுமா என்று கூட தெரியாது. ஆனால் நான் அவர் என்னிடம் பேசும்போது அலட்சியமாக நடந்து கொண்டதாக அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் யாரிடமும் அலட்சியமாக நடந்துகொள்பவன் அல்ல. நடக்காத சம்பவத்தை நீங்கள் நேரில் கண்டேன் என்று சொல்வது மிக பெரிய அவதூறு. ஆயிரக்கணக்கான மக்களுக்கு பொய்யான செய்திகளை பரப்பவேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்" என கூறியுள்ளார்.