இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
கமல்ஹாசன் நடிக்கும் 232 வது திரைப்படமான "விக்ரம்" படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், சந்தான பாரதி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு முடியும் என தெரிகிறது.
சமீபத்தில் இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் விக்ரம் படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட உள்ளனர். விஜயின் பீஸ்ட் ஏப்ரல் 14ம் தேதி ரிலீசாகும் என கூறப்படுவதால் விக்ரம் படத்தை ஏப்ரல் 29ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.