'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
'கிரீன் இந்தியா சேலஞ்ச்' நிகழ்வு மூலம் தெலுங்குத் திரையுலகத்தின் சினிமா நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள் மரக்கன்றுகளை நடுவதை கடந்த சில வருடங்களாகச் செய்து வருகின்றனர். தெலங்கானா மாநில ராஜ்ய சபா எம்.பி.யான சந்தோஷ்குமார் இதை முன்னின்று செய்து வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 1000 ஏக்கர் நிலத்தைத் தத்தெடுக்க உறுதி அளித்திருந்தார் நாகார்ஜுனா. அதன்படி வனத்துறைக்குச் சொந்தமான செங்கிசெல்லா காட்டுப் பகுதியில் 1000 ஏக்கர் நிலத்தைத் தத்தெடுத்துள்ளார். அங்கு அவரது அப்பா மறைந்த நடிகர் நாகேஸ்வர ராவ் பெயரில் நகர்ப்புற பூங்கா ஒன்றை உருவாக்க உள்ளார். நேற்று தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்தநாளை முன்னிட்டு தத்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
தனது மனைவி அமலா, மகன்கள் நாக சைதன்யா, அகில் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டார் நாகார்ஜுனா. அந்த பூங்காவில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளனர்.