'புஷ்பா 2' : கமல்ஹாசன் மட்டும் மிஸ்ஸிங் | கதாநாயகியின் ஆடையைத் துவைத்த இயக்குனர் | 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றி மோசமாக கமெண்ட் செய்த ரசூல் பூக்குட்டி | மகாபாரத கதையை இயக்குவது எப்போது? - ராஜமவுலி வெளியிட்ட தகவல் | பிரமாண்டமாக நடைபெற இருக்கும் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா | ரஜினியுடன் மீண்டும் இணையும் யோகி பாபு | மூன்றாவது முறையாக ராம்குமாருடன் இணையும் விஷ்ணு விஷால் | சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | பொன்னியின் செல்வன் - ஆதித்ய கரிகாலனாக விக்ரம் : புதிய போஸ்டர் வெளியீடு | விரைவில் புதிய வீட்டில் குடியேறும் நயன்தாரா - விக்னேஷ் சிவன்! |
பிரபுதேவா நடிப்பில் தயாராகும் படத்திற்கு 'முசாசி' என பெயரிடப்பட்டு, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் இந்தபடம் ஆக்சன் எண்டர்டெய்னராக உருவாகிறது. சவாலான போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை.
இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் 'மாஸ்டர்' மகேந்திரன், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார். ஜாய் பிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் ஜான் பிரிட்டோ தயாரிக்கிறார்.