'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஒரு பக்க கதை படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். இந்த படம் வெளிவர தாமதமாக கவுதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சிம்புவிற்கு ஜோடியாக வந்தா ராஜாவா தான் வருவேன், ரஜினியின் பேட்ட படத்திலும் நடித்ததால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.. தற்போது விஜய்சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர், விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது கையில் சிகரெட்டுடன் வாயில் புகையை ஊதியபடி மேகா ஆகாஷ் இருக்கும் போஸ்டர் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது... ஆம்.. மேகா ஆகாஷ் தெலுங்கில் தான் புதிதாக நடிக்கும் படத்திற்காக முதன்முறையாக சிகரெட் பிடித்து நடித்துள்ளார். அதையே போஸ்டராக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த படத்தை அபிமன்யு பட்டி என்பவர் இயக்குகிறார்.. இவர் கடந்த வருடம் மேகா ஆகாஷ் நடிப்பில் வெளியான டியர் மேகா என்கிற படத்தை இயக்கிய சுஷாந்த் ரெட்டியின் உதவி இயக்குனர் ஆவார்.. அந்த படப்பிடிப்பின்போது இவரது திறமை மற்றும் இவர் சொன்ன கதை என இரண்டுமே மேகா ஆகாஷுக்கு மட்டுமல்ல, அவரது அம்மாவுக்கு பிடித்துப்போய் விட்டது. அதனால் தான் இந்த படத்தை மேகா ஆகாஷின் அம்மா பிந்து ஆகாஷ், தானே சொந்தமாக தயாரித்து வருகிறார்.