ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் விமல் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள கிரைம் திரில்லர் வெப்சீரிஸ் 'விலங்கு'. காவல்துறையினரை திக்குமுக்காட வைக்கும் ஒரு மர்மம் நிறைந்த குற்றத்தை புரிந்தது யார் என்பதை கண்டறியும் பொறுப்பு விமல் வசம் வருகிறது. வழக்கமாக வரும் குற்றப்பின்னணி கொண்ட கிரைம் போலீஸ் கதைகள் போல இல்லாமல் ஒரு மாறுபட்ட கதை களத்தை இத்தொடர் கொண்டுள்ளது. இந்த வெப்சீரிஸ் நாளை(பிப்., 18) முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதையடுத்து இரண்டு தினங்களில் இந்த தொடர் சிறப்பு காட்சியாக ஜீ தமிழ் டிவியில் வரும் பிப்., 20 அன்று ஞாயிற்றுகிழமை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. ஓடிடியில் பார்க்க முடியாதவர்கள் ஜீ தமிழில் காணலாம்.