சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' |
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளான 'அரபிக்குத்து' பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. பாடலைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தாலும், இளம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள இந்தப் பாடல் தற்போது யுடியுபில் 4 கோடி பார்வைகளைத் தொட உள்ளது.
இப்பாடல் இந்த அளவிற்கு ஹிட்டானதில் மற்றவர்களை விட படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். தினமும் பாடலைப் பற்றி ஏதாவது ஒரு பதிவை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
நேற்று பாடலுக்கு நடனமாடி ஒரு 'ரீல்' வீடியோவைப் பகிர்ந்து இது போல நீங்களும் 'ரீல்' வீடியோவை அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக “அரபிக்குத்து' பாடலுக்காக நீங்கள் அனுப்பிய ரீல்களை நேசிக்கிறேன். எங்களுக்கு நீங்கள் அனுப்பும் அனைத்து அன்பையும் திருப்பி அனுப்புகிறேன்,” என தனது கைகளில் ஹாட்டின் காட்டி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.