தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
தென்னிந்திய அளவில் 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகளை யு டியூபில் பெற்ற பாடலாக 'பீஸ்ட்' படத்திலிருந்து இடம் பெற்ற 'அரபிக்குத்து' பாடல் புதிய சாதனையைப் படைத்தது. தற்போது 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ள இப்பாடல் 2.5 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது.
இப்பாடலில் விஜய்யின் நடனத்தை ரசிக்கும் ரசிகர்கள் அவருக்குப் போட்டியாக ஆடும் நாயகி பூஜா ஹெக்டேவின் நடனத்தையும் ரசிக்கிறார்கள். ஏற்கெனவே தெலுங்கு சினிமாவில் சிறப்பாக நடனமாடும் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தில் 'புட்ட பொம்மா' பாடலில் பூஜா ஹெக்டேவின் நடனமும் அல்லுவுக்குப் போட்டியாகவே இருந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்க வந்துள்ள பூஜா, தற்போது 'அரபிக்குத்து' பாடல் சூப்பர் ஹிட்டானதற்கு மகிழ்ச்சியாக உள்ளார். தற்போது தனது குடும்பத்தினருடன் மாலத் தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள பூஜா 'அரபிக்குத்து' பாடலுக்கு நடனமாடி ஒரு சிறு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பூஜாவின் அட்டகாசக் குத்தை 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.