இந்திய டி-20 அணிக்கு தேர்வான கேரள வீரருக்கு பிஜூமேனன் நேரில் வாழ்த்து | விஜயகாந்த் நினைவிடத்தில் பாலா நெகிழ்ச்சி செயல்! | கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய ப்ரியங்கா நல்காரி | இவ்வளவு வைரலாகும் என நினைக்கவேயில்லை : தர்ஷனா | டீச்சராக மாறி வகுப்பெடுக்கும் கேப்ரில்லா செல்லஸ் | திடீர் இயக்குனரான ஜோதி கிருஷ்ணா | ஒரு நொடி இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர் | 22 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கிய கே.ரங்கராஜ் | கொளுத்தும் வெயிலில் காத்திருந்த சிறுவர்கள் ஏமாற்றம் : மன்னிப்பு கேட்ட பிரபுதேவா | சினிமா பற்றி சினிமா எடுத்தால் ஓடாதா? : கவின் ஆதங்கம் |
ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சாயம்'. புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
நாகா உதயன் இசையமைத்திருக்கிறார், கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். படம் சாதி பிரச்சினைகளையும், ஆணவக் கொலையையும் பற்றி பேசுகிறது. அது தொடர்பான சட்டம் மற்றும் சமூக போராட்டத்தையும் சொல்கிறது என்கிறார் இயக்குனர் ஆண்டனி சாமி. படம் வரும் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.