பிளாஷ்பேக்: ஒரே படத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்த சிவாஜியும், பிரபுவும் | பிளாஷ்பேக்: மாப்பிள்ளையை வெற்றி பெற வைத்த சர்க்கஸ் காட்சிகள் | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில், 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' | 500 கோடி வசூலில் 'கூலி' | சச்சின் டெண்டுல்கர் ரசித்துப் பார்த்த '3பிஹெச்கே' | மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா |
கேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி, டூரிங் டாக்கீஸ், உள்ளிட்ட படங்களில் நடித்த அபி சரவணன், தற்போது பிளஸ் ஆர் மைனஸ், அந்த ஓரு நாள், நாடகம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் சாயம் என்கிற ஒரு அரசியல் படத்திலும் நடிக்கிறார்.
ஒயிட் லேம்ப் புரொடக்சன் மற்றும் எஸ்.பி. ராமநாதன் தயாரிப்பில் உருவாகி வருகிறது. புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்குகிறார். இந்தியா பாகிஸ்தான் படத்தில் நடித்த ஷைனி இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் பலர் நடித்துள்ளனர்.
நாகா உதயன் இசையமைக்கும் இந்தப்படத்திற்கு கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளது. தற்போதைய நிலைமை சீராவதை பொறுத்து படம் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.