புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
கன்னட நடிகை ராகினி திவேதி. ஏராளமான கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம்ரவி ஜோடியா நடித்தார். அதற்கு முன் அறியான் என்ற படத்தில் நடித்திருந்தார்.
கன்னட சினிமாவை உலுக்கிய போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ராகினி சுமார் 4 மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட அவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். கன்னட படம் ஒன்றில் நடித்து வரும் அவர் தற்போது மீண்டும் தமிழிலும் நடிக்கிறார்.
த்ரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு படத்தை இயக்கிய கே.திருஞானம் இயக்கும் ‛ஒன் 2 ஒன்' என்ற படத்தில் சுந்தர்.சி ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி நடிக்கின்றனர். விக்ரம் மோகன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.