டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

சமீபத்தில் தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த படம் 'கோர்ட் ஸ்டேட் vs நோபடி'. குறைந்த பட்ஜெட்டில் உருவான படம் பல மடங்கு வசூலைக் குவித்தது. பெரிய இடத்து பெண்ணை காதலித்ததற்காக எழை பையனை பழிவாங்க அவன் மீது தவறுதலாக போக்ஸோ சட்டம் பாய, அதிலிருந்து அவனை ஜூனியர் வக்கீலான நாயகன் பிரியதர்ஷி புலிகொண்டா எப்படி விடுவிக்கிறார் என்பதே கதை. படத்தில் பெரும்பாலான காட்சிகள் கோர்ட்டில் நடக்கும்படி இருந்தது. ஆனால் படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாகவும், வசனங்கள் ரசிகர்களை கவர்ந்ததாலும் படம் சூப்பர் ஹிட்டானது.
இந்த படம் தமிழில் ரீ-மேக் ஆக போகிறது. இதன் உரிமையை நடிகர் பிரசாந்த்தின் தந்தையும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் வாங்கியுள்ளார். இந்த படத்தை தமிழில் தியாகராஜன் இயக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். பிரியதர்ஷி வேடத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்கலாம் என தெரிகிறது. மேலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ராஜ்குமார், தேவையாணி தம்பதியினரின் மகளை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.