‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படமாக 'கருப்பு' படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா தனது 46வது படத்தில் நடித்து வருகிறார். இதனை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதத்தில் ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வெங்கி அட்லூரி பேட்டி ஒன்றில் இந்த படத்தை குறித்து கூறியதாவது, "சூர்யா 46 படம் ஒரு முழுக்க முழுக்க குடும்ப படமாக உருவாகிறது. இந்த படத்தில் எமோஷனலுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. இதில் சூர்யாவின் கதாபாத்திரம் கஜினி படத்தில் இடம்பெற்ற சஞ்சய் ராமசாமிக்கு இணையான கதாபாத்திரமாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.