அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள படம் 'தலைவன் தலைவி'. இதனை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் சேலம் சரவணன், செம்பியான் வினோத், யோகி பாபு, ரோஷினி ஹரிபிரியன், தீபா, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஓராண்டுக்கு மேலாக நடந்து வந்த இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன.
சில வாரங்களுக்கு முன் இந்த படத்திலிருந்து ‛பொட்டல முட்டாயே' என பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அதில் வரும் ஒவ்வொரு நடிகர்களின் கேரக்டர்கள் பெயரும் வித்தியாசமாக உள்ளது. மேலும் படத்தின் கதை ஹோட்டல், உணவு சார்ந்த விஷயமாக இருக்கும் என தெரிகிறது. அதோடு படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர். அதன்படி இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 25ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என தெரிவித்துள்ளனர்.