டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

'புஷ்பா' படத்தில் இடம் பெற்ற 'ஓ சொல்றியா மாமா' பாடல் யு டியூபில் 100 மில்லியன் சாதனையைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு முன்னணி கதாநாயகியான சமந்தா கவர்ச்சிகரமான நடனமாடினார். பாடலும், நடனமும் ஹிட்டாகி ரசிகர்களை தியேட்டர்களில் ஆட வைத்துள்ளது.
வெளியீட்டிற்கு முன்பு சர்ச்சையை ஏற்படுத்தியதும் இப்பாடலை அதிகம் பார்க்க வைத்துள்ளது. தெலுங்கில் இப்பாடல் 63 மில்லியன் பார்வைகளையும், தமிழில் 16 மில்லியன், ஹிந்தியில் 12 மில்லியன், கன்னடத்தில் 6 மில்லியன், மலையாளத்தில் 2 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.
தமிழில் இப்பாடலை விவேகா எழுத நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். இப்பாடல் இந்த அளவுக்கு வரவேற்பு பெற்றுள்ளது குறித்து சமந்தா, “நல்லவளாக நடித்திருக்கிறேன், கெட்டவளாக நடித்திருக்கிறேன், ஜாலியாக, சீரியசாக இருந்திருக்கிறேன், தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறேன். நான் எடுத்துக் கொள்வதை சிறப்பாகச் செய்ய கடினமாக உழைப்பேன். ஆனால், 'செக்சி' ஆக நடிப்பதென்பது அடுத்த கட்ட கடின உழைப்பு. உங்கள் அன்புக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தாவின் இந்தப் பதிவுக்கு நடிகைகள் தமன்னா, மாளவிகா மோகனன், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.




