டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார் : அமெரிக்காவில் ஒரு மாதம் ஓய்வு | சமந்தாவின் இன்ஸ்டா முடக்கப்பட்டதா? | வெந்து தணிந்தது காடு - இசை விழா ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது | பொன்னியின் செல்வன் - நந்தினியாக ஐஸ்வர்யா ராய் | 'தி கிரேமேன்' - பட புரொமோஷனுக்காக ஹாலிவுட் பறந்த தனுஷ் | விஜய்யின் வாரிசு - பிரெஞ்சு படத்தின் தழுவலா? | பார்த்திபனை ஆச்சரியப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | உலக அளவில் சாதனை படைத்த 'கேஜிஎப்' போஜ்புரி | ஜவான் - ஷாருக்கானுக்கும் வில்லன் விஜய் சேதுபதி? | ஷங்கரின் படத்தில் நடனத்திற்கு 1000 பேர், சண்டைக்கு 1200 பேர் |
டாம் ஹாலந்த், ஜென்டயா மற்றும் பலர் நடிக்க ஜோன் வாட்ஸ் இயக்கத்தில் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியான படம் 'ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்'. இப்படத்திற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தியேட்டர்களுக்கு வந்து படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முதல் வார இறுதியில் இப்படம் உலகம் முழுவதும் சுமார் 600 மில்லியன் யுஎஸ் டாலர்களை வசூலித்துள்ளதாம். இந்திய ரூபாய் மதிப்பில் 4500 கோடி. இதன் மூலம் முதல் வாரத்தில் அதிக வசூலைப் பெற்ற மூன்றாவது ஹாலிவுட் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.
இந்தியாவில் மட்டும் இப்படம் நான்கு நாட்களில் 140 கோடியை வசூலித்துள்ளது. உலக அளவில் 'ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்' படத்திற்கு அதிக வசூலைக் கொடுத்த நாடுகளில் இந்தியா 5வது இடத்தில் உள்ளதாம்.
இந்தியாவில் இதற்கு முன்பு வெளியான 'ஸ்பைடர் மேன்' படங்களில் 'ஸ்பைடர்மேன் - ஹோம் கம்மிங்' படம் 60 கோடி ரூபாயையும், 'ஸ்பைடர்மேன் - பார் பிரம் ஹோம்' படம் 86 கோடி ரூபாயையும் முதல் நாள் நிகர வசூலாகப் பெற்றிருந்தது. 'ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்' படம் 109 கோடி ரூபாயை நிகர வசூலாகப் பெற்றிருக்கிறது.
சிறந்த ஆக்ஷன் ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் எப்போதுமே நல்ல வரவேற்பும், வசூலும் உண்டு என்பதை இப்படம் மீண்டும் நிரூபித்துள்ளது.