உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை | 28 ஆண்டுகளுக்குபின் நடிக்கும் டிஸ்கோ சாந்தி | ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் கேரக்டரில் முதலில் நடித்தவர்கள் : கேப்டன் பிரபாகரன் குறித்து ஆர்.கே.செல்வமணி | கூலி : பெங்களூருவில் அதிகபட்ச கட்டணம் ரூ.2000 | 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மெஹ்ரின் பிரதிஸ்டா | பிளாஷ்பேக்: மங்கம்மாவின் வெற்றியும், தோல்வியும் | ஹீரோயின் ஆனார் சேஷ்விதா கனிமொழி | 37 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் மாலாஸ்ரீ மகள் | பிளாஷ்பேக் : டைட்டில் கார்டு நடைமுறையை மாற்றிய படம் | நவம்பர் மாதத்தில் ராஜமவுலி, மகேஷ்பாபு பட அப்டேட் |
'புஷ்பா' படத்தில் இடம் பெற்ற 'ஓ சொல்றியா மாமா' பாடல் யு டியூபில் 100 மில்லியன் சாதனையைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு முன்னணி கதாநாயகியான சமந்தா கவர்ச்சிகரமான நடனமாடினார். பாடலும், நடனமும் ஹிட்டாகி ரசிகர்களை தியேட்டர்களில் ஆட வைத்துள்ளது.
வெளியீட்டிற்கு முன்பு சர்ச்சையை ஏற்படுத்தியதும் இப்பாடலை அதிகம் பார்க்க வைத்துள்ளது. தெலுங்கில் இப்பாடல் 63 மில்லியன் பார்வைகளையும், தமிழில் 16 மில்லியன், ஹிந்தியில் 12 மில்லியன், கன்னடத்தில் 6 மில்லியன், மலையாளத்தில் 2 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.
தமிழில் இப்பாடலை விவேகா எழுத நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். இப்பாடல் இந்த அளவுக்கு வரவேற்பு பெற்றுள்ளது குறித்து சமந்தா, “நல்லவளாக நடித்திருக்கிறேன், கெட்டவளாக நடித்திருக்கிறேன், ஜாலியாக, சீரியசாக இருந்திருக்கிறேன், தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறேன். நான் எடுத்துக் கொள்வதை சிறப்பாகச் செய்ய கடினமாக உழைப்பேன். ஆனால், 'செக்சி' ஆக நடிப்பதென்பது அடுத்த கட்ட கடின உழைப்பு. உங்கள் அன்புக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தாவின் இந்தப் பதிவுக்கு நடிகைகள் தமன்னா, மாளவிகா மோகனன், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.