ஜன. 30ல் திரைக்கு வரும் ‛தலைவர் தம்பி தலைமையில்' | 'பாபு, ஏய்' படங்களின் 'உல்டா' தான் 'பகவந்த் கேசரி', அதன் ரீமேக் தான் 'ஜனநாயகன்' | பிப்ரவரி முதல் கல்கி 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் | திரிஷ்யம் 3 ரிலீஸ் எப்போது : இயக்குனர் தகவல் | ரன்வீர் சிங் ஜோடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் டீசர் ஜனவரி 9ல் ரிலீஸ் | ரேஸின் போது அஜித்தை சந்தித்தது ஏன் : ஸ்ரீலீலா பதில் | ரிலீஸ் அறிவிக்கப்பட்ட தேதியில் தீர்ப்பு; 'ஜனநாயகன்' ஜன.9ல் வெளியாகுமா? | சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி |

'பரமசிவன் பாத்திமா' படத்தின் மூலம் அறிமுகமானவர் சேஷ்விதா கனிமொழி. விஜய் ஆண்டனி நடித்த மார்கன் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தார். தற்போது 'குற்றம் புதிது' என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியுள்ளார். ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நோகா ஆர்ம்ஸ்ட்ராங் என்ற புதுமுகம் இயக்குகிறார். தருண் விஜய் என்ற புதுமுகம் இதில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சேஷ்விதா நடிக்கிறார்.
இவர்களுடன் மதுசூதனராவ், நிழல்கள் ரவி, ராமசந்திரன் துரைராஜ், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜ்குமார் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், கரன் கிருபா இசை அமைத்துள்ளார்.
சேஷ்விதா கூறும்போது "பரமசிவன் பாத்திமா படம் எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. 'மார்கன்' படம் நடிக்க நல்ல வாய்ப்பு கொடுத்தது. ஆனால் இந்த படம்தான் எனது முதல் படம். ஆடிசன் மூலம் தேர்வானேன். 3 மாதங்கள் வரை பயிற்சி எடுத்து நடித்தேன். இதில் தந்தை - மகளுக்கு இடையிலான உறவை சொல்லும் பகுதியில் மகளாக நடித்திருக்கிறேன். ஆனாலும் ஒரு மெடிக்கல் த்ரில்லர் படம். தொடர்ந்து வாய்ப்புகள் வருகிறது என்றார்.