டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ் சினிமா நட்சத்திரமான நகுல் தற்போது சின்னத்திரையில் பல போட்டி மேடைகளில் நடுவராக அலங்கரித்து வருகிறார். இவருக்கு அழகான பெண் குழந்தை உள்ளது. சமூக கருத்துடன் பேசும் ஸ்ருதிக்கும் தற்போது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அதேபோல் சர்ச்சையாக பேசும் சில நெட்டீசன்களுக்கும் கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து அடிக்கடி சூடு கொடுத்து அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நகுல் தனது மனைவி மற்றும் மகள் அகிராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'அழகிய தேவதைகள்' என்று குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவில் நெட்டிசன் ஒருவர் உங்கள் மனைவி திருநங்கை போல இருக்கிறார் என மோசமாக விமர்சித்துள்ளார். இதனால் கடுப்பான நகுல், அந்த நெட்டிசனை கமெண்டிலேயே லெப்ட் ரைட் வாங்கிவிட்டார். அதில் அவர், 'நீ யாரு என்ன ப்ரோன்னு கூப்பிடுறதுக்கு? உனக்கும் எனக்கும் காமனா என்ன இருக்கு? நீ பேசினத்துக்கு கண்டிப்பா கஷ்டப்படுவ. இந்த மாதிரி பேசுறவங்க லைப்ல எதுவுமே சாதிக்காம் அடுத்தவங்கள குறை சொல்ற சீப்பான கேரக்டரா தான் இருக்க முடியும்' என விமர்சித்து பதில் கமெண்ட் அளித்துள்ளார்.
இதனையடுத்து அந்த நெட்டிசன் நகுலின் பதிவிலிருந்து எஸ்கேப் ஆகி சென்றுவிட்டார். தேவையா இதெல்லாம் அவருக்கு?




