தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் நடித்தவர் நகுல். நடிகை தேயானியின் தம்பி. அந்த படத்திற்கு பிறகு வாய்ப்பில்லாமல் இருந்த அவர் திடீரென உடல் எடை குறைத்து 5 வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக நடித்த படம் 'காதலில் விழுந்தேன்'. அதன்பிறகு மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், தமிழக்கு எண் ஒன்றை அழுத்தவும், நாரதன், பிரம்மா டாட் காம், வந்தாமல படங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடிப்பில் 'செய்' என்ற படம் 2018ம் ஆண்டு வெளிவந்தது. அதன்பிறகு அவர் நடித்த படம்தான் 'வாஸ்கோடகாமா'. நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளிவருகிறது.
கதாநாயகியாக செம மற்றும் கடைகுட்டி சிங்கம் படங்களில் நடித்த அர்த்தனா பினு நடித்துள்ளார். வம்சி கிருஷ்ணா வில்லனாக நடித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்தராஜ், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், நமோ நாராயணன், மதன் பாபு, வாசு விக்ரம், செல் முருகன், புஜ்ஜி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆர்.எஸ்.சிவாஜி, லொள்ளு சபா மனோகர், படவா கோபி நடித்துள்ளனர். ஆர்.ஜே.கிருஷ்ணன் இயக்கியுள்ளார். என்.எஸ்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், என்.வி.அருண் இசை அமைத்துள்ளார். தொழிலதிபர் சுபாஸ்கரன் 5656 புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.