அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

திட்டம் இரண்டு, அடியே படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் அடுத்து இயக்கி உள்ள படம் 'ஹாட் ஸ்பாட்'. இதில் கலையரசன், சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், சுபாஷ், ஆகியோருடன் கவுரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி சோபியா என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
கேஜேபி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே.ஜே.பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரித்துள்ளனர். சதீஷ் ரகுநாதன்- வான் ஆகியோர் இசையமைத்துள்ளார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வர உள்ளது.
படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் கூறியதாவது : சமுதாயத்தில் அன்றாடம் நம் கண் முன்பே நடக்கும் சில அடிப்படை விஷயங்களை தட்டிக் கேட்க தைரியம் இல்லாமல் அதை கவனிக்காமல் செல்கிறோம். ஆனால் இது சமுதாயத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதன் பின்விளைவுகள் நம்மை பாதிக்கும் போது தான் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்று நாம் யோசிப்போம். அப்படிப்பட்ட முக்கிய விஷயங்களை அலசும் கதையாக ஹாட்ஸ்பாட் படம் இருக்கும்.
திரைக்கு வந்த பிறகு இப்படம் சமுதாயத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் இது மக்களை மற்றும் மக்களை சுற்றி நடக்கும் அரசியலை குறித்து விவாதிக்கும் கதை. இளைஞர்கள் முதியவர்கள் மற்றும் அனைத்து சமூகத்தினர் மனங்களில் இப்படம் விழிப்புணர்வையும், தட்டி கேட்க வேண்டும் என்ற துணிச்சலையும் தரும் என்றார்.