அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

கன்னட சின்னத்திரை தொடர் மூலம் புகழ் பெற்றவர் மேகா ஷெட்டி. 'டிரிபிள் ரெய்டிங்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு பல படங்களில் நடித்தார். தற்போது தமிழுக்கு வருகிறார்.
இதுகுறித்து மேகா ஷெட்டி கூறும்போது, “எனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் விரும்புகிறேன். தமிழ் படங்கள் கதாநாயகிகளுக்கு அப்படியான கதாபாத்திரங்களை கொடுத்து வருகிறது. நானும் அதைப்போன்ற கதாபாத்திரங்களை ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்பார்த்துள்ளேன். விரைவில் தமிழ் படம் ஒன்றில் நடிக்கிறேன். இதுபற்றிய அறிவிப்பை தயாரிப்பு தரப்பினர் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடுவார்கள். நடிப்புத் தவிர, திரைப்படங்களைத் தயாரிக்கவும், எதிர்காலத்தில் திரைப்பட ஆர்வலர்களுக்கு தரமான கதைகளை கொடுக்கவும் விரும்புகிறேன். இது எனது குடும்பத் தொழில். தொழில் என்பதையும் தாண்டி இது என்னுடைய காதல்" என்றார்.