'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. விஷால் நடிப்பில் வெளியான 'ஆக்ஷன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' படம்தான் அவரை தமிழ் ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது. அதன் பிறகு 'பொன்னியின் செல்வன்' படத்தில் பூங்குழலியாக நடித்து மேலும் புகழ்பெற்றார். தொடர்ந்து கட்டா குஸ்தி, கிங் ஆப் கோதா' படங்களில் நடித்தார். இப்போது மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் 'தக் லைப்' படத்தில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா லட்சுமி ஒரு தயாரிப்பாளரும் ஆவார். மலையாளத்தில் சில படங்களை தயாரித்துள்ள இவர் தமிழில் சாய் பல்லவி நடித்த 'கார்கி' படத்தை தயாரித்திருந்தார்.
இந்த நிலையில் 'ரேஞ்ச் ரோவர் எவோக் 2024' என்ற சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்த ஆண்டு மார்கெட்டுக்கு வந்துள்ள இந்த மாடல் காரை கேரளாவில் வாங்கும் முதல் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இந்த காரின் மதிப்பு சுமார் ஒரு கோடி (ஆன் ரோடு சேர்த்து) என்று கூறப்படுகிறது. ஐஸ்வர்யாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.