டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றியைப் பெற்ற படம் திரிஷ்யம். தற்போது இதன் மூன்றாம் பாகம் உருவாகிறது. இந்த படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் இரண்டு பாகங்கள் வெளியாகி வெற்றியை பெற்ற நிலையில் இந்த மூன்றாம் பாகத்தை ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் உருவாக்க வேலைகள் நடந்து வருகின்றன. அதேபோல மூன்று படங்களையும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அதேசமயம் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ஜீத்து ஜோசப் திரிஷ்யம் 3 ரிலீஸ் பற்றி கூறும்போது, “இந்த படத்தின் இரண்டு பாகங்களும் ஏற்கனவே வெளியாகி இதன் கதை ரசிகர்களுக்கு தெரிந்து விட்டதால் மலையாளத்தில் இதன் மூன்றாம் பாகம் வெளியாகும் போது அது ஹிந்தி மற்றும் தெலுங்கு பாக்ஸ் ஆபிஸை பாதிக்கும் என்று சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல கதையும் பல பேருக்கு தெரிய வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் மூன்று படங்களையும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்தால் அது மூன்று மொழிகளிலும் வியாபாரத்தையும் பாதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
இது குறித்து எங்களது தயாரிப்பாளருடன் மற்ற மொழி தயாரிப்பாளர்கள் பேசி வருகிறார்கள். இப்போதைக்கு நாங்கள் படத்தை எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறோம். ரிலீஸ் நேரத்தில் அது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும். அப்படி சரியாக முடிவு எடுக்கப்படவில்லை என்றால் வழக்கம் போலவே மலையாளத்தில் திரிஷ்யம் 3 முதலில் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.
இப்படி அவர் கூறினாலும் மலையாளத்தில் உருவாகும் திரிஷ்யம் 3 தான் தமிழிலும் கன்னடத்திலும் மொழி மாற்றம் செய்து வெளியாகும் என்பதால் இந்த மூன்று மொழிகளில் வியாபாரத்தால் அந்த படத்திற்கு லாபம் தானே தவிர பெரிய பாதிப்பு இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.