அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

சமீபகாலமாக நடிகர் மம்முட்டி வித்தியாசமான கதை அம்சம் கொண்ட புதிய முயற்சிகளுடன் கூடிய படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார். கடந்த வருடம் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் மற்றும் காதல் : தி கோர், ரோசாக் உள்ளிட்ட படங்கள் அனைத்தும் இந்த வகையை சேர்ந்தவை தான். அதேவிதமாக தற்போது அவரது நடிப்பில் பிரம்மயுகம் என்கிற படம் மலையாளத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்தை ராகுல் சகாதேவன் என்பவர் இயக்கியுள்ளார். வரும் பிப்ரவரி 15ம் தேதி இந்த படம் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர், இடையில் வெளியான போஸ்டர்கள், சமீபத்தில் வெளியான டீசர் என எல்லாமே பிளாக் அண்டு ஒயிட் ஆகவே இருந்தன. ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படி வித்தியாசமாக செய்கிறார்கள் என்று நினைத்தால் விரைவில் வெளியாக இருக்கும் இந்த மொத்த படமும் கருப்பு வெள்ளையில்தான் திரையிடப்படுகிறது என்கிற ஒரு ஆச்சரிய தகவலையும் பட தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
கருப்பு வெள்ளை படங்கள் வெளிவருவது நின்று கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு கருப்பு வெள்ளை திரைப்படம் வெளியாவதை நிச்சயம் ஒரு வித்தியாச முயற்சி என்று தான் சொல்ல வேண்டும்.