பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
படம் : குடைக்குள் மழை
வெளியான ஆண்டு : 2004
நடிகர்கள் : பார்த்திபன், மதுமிதா
இயக்கம் : பார்த்திபன்
தயாரிப்பு : பயாஸ்கோப் பிலிம் பிரேம்ஸ்
'மல்டிபிள் பர்சனாலிட்டி' எனும், நமக்குள் இருக்கும் அன்னியனை அறிமுகப்படுத்திய படம், குடைக்குள் மழை. இப்படத்தில் இருந்து, ஒரு பகுதி ஆடை, மறுபகுதி அந்நியன் என பரிணாமம் எடுத்தது எனலாம்.
மறைவாய் கேமராவை வைத்து, பொதுமக்களிடம் நிஜம் போலவே ஒரு நிகழ்ச்சியை நடத்தி, இறுதியில் எல்லாம் சும்மா தான் என்ற, 'ப்ராங்க் ஷோ' காரணமாக, ஒருவனுக்குள் நிகழும் மன விரிசல் தான், இப்படத்தின் கதைக்களம். அந்த மன விரிசல், இன்னொரு நபரை உருவாக்கி, அதை கொன்று, நமக்குள் பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்வார், இயக்குனர் பார்த்திபன்.
'என்ன... படம் ஒரு மாதிரிப் போகுதே...' என, சோம்பல் முறிக்கும்போது தான், யாரும் எதிர்பார்க்காத, 'கிளைமாக்ஸ்' வரும். படத்தின் இறுதி காட்சி, ஒட்டுமொத்த படத்தையும் திரும்ப நினைவுகூரச் செய்யும். 'ஓ... இதுக்காகத் தான், அந்த காட்சி வந்ததா...' என, ரசிகர்களை சிலர்க்க வைத்திருப்பார், பார்த்திபன்.
உடைந்த பல்ப் துண்டில் நிலா தெரிய செய்வது போல, பல இடங்களில், இயக்குனரின், 'டச்' ரசிக்கச் செய்தது.படத்தின் கலை இயக்குனர் விஜய் முருகன், ஆச்சரியப்பட செய்தார். மேற்கூரையில் நகர்கிற பிரமாண்ட கண்ணாடி கடிகாரம், அவரின் கலைக்கு ஓர் உதாரணம்.
பார்த்திபன் துாக்கு மாட்டிக் கொள்ள, ஒரு பட்டுச் சேலையை எடுக்க, அது கதாநாயகியாக மாறி, அவரைப் படாதபாடு படுத்தும் காட்சியில், சஞ்சயின் கேமராவும், கார்த்திக் ராஜாவின் இசையும், 'மேஜிக்' நிகழ்த்தியிருக்கும். தரமான படம் தான்; ரசிகர்கள் புரிந்து கொள்ள கொஞ்சம் காலதாமதம் ஆனது. அதுவே, இப்படத்தின் வசூல் ரீதியான தோல்விக்கு காரணமாக அமைந்தது.
பார்த்திபன் விழும்போதெல்லாம் விதை!