முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் |

படம் : எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி
வெளியான ஆண்டு : 2004
நடிகர்கள் : ஜெயம் ரவி, அசின், பிரகாஷ்ராஜ், நதியா, விவேக்
இயக்கம் : ராஜா
தயாரிப்பு : ஜெயம் புரொடக்ஷன்ஸ்
தந்தை மோகன் தயாரிப்பில் அண்ணன் ராஜா இயக்க, தம்பி ரவி நடித்த குடும்ப படம் ஜெயம் வெற்றி பெற்றதை அடுத்து, இதே கூட்டணி, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என, களமிறங்கியது. முதல் படத்தை போலவே இப்படமும் தெலுங்கு ரீமேக் தான். அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி படத்தில், சில மாற்றங்கள் செய்து, இப்படத்தை இயக்கியிருந்தார், ராஜா.
அம்மா, மகன் பாசத்தை மையமாக வைத்து, இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது.'பாக்ஸிங்' வீரரான பிரகாஷ்ராஜ், தன் மனைவி நதியா மீதுள்ள அக்கறையால், லட்சியத்தை அடைய முடியாமல் தவிப்பார். இதை உணர்ந்த நதியா, கணவரை பிரிந்து, தன் மகன் ரவியுடன் சென்னையில் வசிப்பார். பாக்ஸிங் வீரராக வளரும் ரவி, தாயின் மரணத்திற்கு பின், மலேஷியாவில் உள்ள தன் தந்தையிடம் செல்வார். அங்கு நடக்கும் ஆக் ஷன், சென்டிமென்ட் தான் படத்தில் கிளைமேக்ஸ்.
'பாக்ஸிங்கை வெச்சுப் படம் எடுத்தா ஓடாது; மலேஷியாவில் எடுத்த படம் ஓடாது' என, சினிமா சென்டிமென்ட் அனைத்தையும், இப்படம் மூக்கில் குத்தி உடைத்தெறிந்தது. படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. தாய், மகன் இடையேயான பாசமும், தந்தை, மகன் இடையேயான முட்டலும், ரசிக்கும்படி இருந்தது. தெலுங்கு பதிப்பில் நடித்த அசின், இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 'மலபார்' என்ற செல்ல பெயரும் பெற்றார். விவேக் காமெடி ரசிக்கச் செய்தது. இப்படத்திற்கு முதலில், எம்.குமரன் சன் ஆப் பாக்கியலட்சுமி என, பெயர் சூட்டப்பட்டது.
இப்படத்திற்காக, சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் விருது பெற்றார், ஸ்ரீகாந்த் தேவா. 'ஐயோ ஐயோ உன் கண்கள், சென்னைச் செந்தமிழ் மறந்தேன், நீயே நீயே நானே...' பாடல்கள் ரசிக்கச் செய்தன.