ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
படம் : திருமலை
வெளியான ஆண்டு : 2003
நடிகர்கள் : விஜய், ஜோதிகா, ரகுவரன், மனோஜ் கே விஜயன்
இயக்கம் : ரமணா
தயாரிப்பு : கவிதாலயா
விஜய்யின் சினிமா பயணத்தில், தொடர்ந்து ஆறு படங்கள் தோல்வியை சந்தித்தன. அப்போது, விஜய்க்கு வாழ்வளித்த படம், அவரை முழுமையான ஆக் ஷன் ஹீரோவாக வெளிப்படுத்திய படம், திருமலை!
கடந்த, 2003-ம் ஆண்டின் தீபாவளிக்கு வெளியான இப்படம், விஜய் ரசிகர்களுக்கு அதிரடி சரவெடியாக அமைந்தது. ஏழை மெக்கானிக் நாயகனுக்கும், பணக்கார நாயகிக்கும் காதல். அதற்கு காதலியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்து, ரவுடியை ஏவுகிறார். ஹீரோ தன் வீரத்தால், ரவுடியை வீழ்த்தி, காதலியை கரம் பிடிக்கிறார். பலமுறை பார்த்து சலித்த, பழைய புளித்துபோன மாவு கதை தான். ஆனால், அறிமுக இயக்குனரான ரமணா, விறுவிறுப்பான திரைக்கதையால், படத்தை வித்தியாசமாக மாற்றியிருந்தார்.
இப்படம் ஆரம்பிக்கப்பட்ட போது, விஜய்க்கு ஜோடியாக நடித்தவர், பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மனைவி நர்மதா தான். சில காரணங்களால், அவர் விலக, ஜோதிகா உள்ளே வந்தார். படத்தில் விஜய் ஓட்டிய, மஞ்சள் நிற, 'பல்சர்' பைக், இன்றும் அவரது வீட்டில் நினைவுச் சின்னமாக இருக்கிறதாம்.
வேலைவாய்ப்பு தேடி, இன்டர்வியூ செல்லும்போதெல்லாம், ஏதாவது ஒரு வகையில் நொந்து நுாடுல்ஸ் ஆகும், விவேக்கின் காமெடி, பெரியதாக ரசிக்கப்பட்டது. மனோஜ் கே விஜயனின், ஆர்ப்பாட்டம் இல்லாத வில்லத்தனமும் ரசிக்க செய்தது. இப்படத்திற்காக, மோகன் ஸ்டுடியோவில் போடப்பட்டிருந்த புதுப்பேட்டை 'மெக்கானிக் ஷெட்' செட், தத்ரூபமாக அமைந்திருந்தது.
வித்யாசாகர் இசையில், 'தாம்தக்க தீம்தக்க, வாடியம்மா ஜக்கம்மா, நீயா பேசியது, அழகூரில், திம்சுக் கட்டை...' பாடல்கள், தாளம்போட்டு ரசிக்க செய்தன.வசூல் மழையில் நனைந்த திருமலை, தெலுங்கில் கவரி என்ற பெயரில், 'ரீமேக்' செய்யப்பட்டது.
பலரது வாழ்வில் திருப்பம் தந்தது, திருமலை!