ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரனான துஷ்யந்த் தயாரித்து வரும் படம், மீன்குழம்பும் மண்பானையும்! இப்படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார், பிரபு. மேலும், நட்புக்காக, படத்தின் கடைசி ஐந்து நிமிடம் வருவது போன்று, ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார், கமல். இந்த வேடம், ஆண்டவன் கட்டளை படத்தில், சிவாஜி கணேசன் நடித்தது போன்ற கெட்டப்பில் இடம் பெற்றுள்ளது. இதுபோன்ற ஒரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்த கமல், அந்த வேடம் பற்றி சொன்னதும், உடனே சம்மதித்ததோடு, அக்காட்சிகளை, இரண்டு மணி நேரத்தில் நடித்தும் கொடுத்து விட்டார்.
— சினிமா பொன்னையா