அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
பிரபல டான்ஸர் ஆனந்தி நீண்ட இடைவெளிக்கு பின் சின்னத்திரை சீரியலில் நடிக்கவுள்ளார். நடிகை ஆனந்தி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சியில் அசத்தலாக ஆட்டம் போட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து பாய்ஸ் வசெஸ் கேர்ள்ஸ் ஷோவிலும் கலக்கினார். சின்னத்திரையில் கார்த்திகை பெண்கள், யமுனா, கனா காணும் காலங்கள், கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் போன்ற தொடர்களிலும், வெள்ளித்திரையில் மீகாமன், தாரை தப்பட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வந்தார். அதன்பின் நீண்ட நாட்களாக நடிப்பை விட்டு ஒதுங்கியே இருந்தார்.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'ராஜா பார்வை' என்ற தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனந்தி இந்த தொடரில் இரண்டாம் கதாநாயகியாக வான்மதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தொடரின் நாயகன் முனாஃப் ரகுமானுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இண்ஸ்டாவில் பகிர்ந்துள்ள அவர், 'விஜய் டிவி குடும்பத்திற்கு திரும்புவதில் மகிழ்ச்சி' என தெரிவித்துள்ளார்.
'ராஜ பார்வை' தொடர் தினமும் பிற்பகல் 1 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது