'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் டிவியின் டான்ஸ் ஷோவின் மூலம் சின்னத்திரை நட்சத்திரமாக அதிகம் பிரபலமானவர் ஆனந்தி. சின்னத்திரை சீரியல்களிலும், சினிமாவிலும் நடித்து வருகிறார். அஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆனந்திக்கு 6 வயதில் மகனும் இருக்கிறார். திருமணத்திற்கு பின் சிறிய கேப் ஒன்றை எடுத்துக்கொண்ட அவர் சமீபத்தில் கலர்ஸ் தமிழ் சேனலில் 'அம்மன் 2' தொடரின் மூலம் கம்பேக் கொடுத்தார். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆனந்தி, இரண்டாவது குழந்தைக்கு தாயாகவுள்ள மகிழ்ச்சியான செய்தியை அண்மையில் அறிவித்திருந்தார். இதனையடுத்து பலரும் அவருக்கு பாராட்டுகளையும், அட்வைஸ்களையும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், அவர் தற்போது கர்ப்பமான வயிறுடன் சில யோகசனங்களை செய்து அதை பதிவிட்டுள்ளார். மேலும், அதில் 'கருவுறுதல் என்பது நோயல்ல. எல்லா பெண்களின் வாழ்க்கையிலும் ஒரு சந்தோஷமான பகுதி தான். தாய்மையை என்ஜாய் பண்ணுங்கள்' என்று கேப்ஷன் போட்டுள்ளார். மேலும், யோகாசனம், வொர்க் அவுட் மற்றும் டான்ஸ் போன்றவற்றை தான் டாக்டரின் பரிந்துரையின் அடிப்படையில் பின்பற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே, சீரியல் நடிகைகள் சமீரா அன்வர், பரீனா மற்றும் ஜெனிபர் ஆகியோர் ப்ரக்னன்சி குறித்து பல விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். அந்த வரிசையில் தற்போது ஆனந்தியும் இணைந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் சிலர் எந்த யோகசனத்தை எப்படி செய்ய வேண்டும் என அட்வைஸ் வழங்கி வருகின்றனர்.