மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு | 75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் |

தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஆனந்தி, கயல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு பொறியாளன், பரியேறும் பெருமாள், என் ஆளோட செருப்ப காணோம், சண்டி வீரன், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, விசாரணை, ரூபாய், பண்டிகை, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, கமலி பிரம் நடுக்காவேரி உள்பட பல படங்களில் நடித்தார்.
அவர் நடித்து முடித்துள்ள அலாவுதனின் அற்புத கேமரா, டைட்டானிக், ஏஞ்சல் படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. இந்த நிலையில் சாக்ரட்டீஸ் என்ற துணை இயக்குனரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ஆனந்தி தெலுங்கில் நடித்து வரும் படம் ஸ்ரீதேவி சோடா சென்டர். இதனை சுதீர் பாபு இயக்குகிறார். சூரி பாபு ஹீரோ. இது ஒரு கிராமத்து காதல் கதை. சோடா சென்டர் நடத்தும் ஆனந்தி சோடா போன்றே அடிக்கடி பொங்குகிறவர். அவருக்கும் திருமணம் உள்ளிட்ட மங்கல நிகழ்ச்சிகளுக்கு மின் அலங்காரம் செய்யும் சூரி பாபுக்கும் இடையிலான காதலும், காமெடியும் தான் படம். இந்த படம் தெலுங்கில் தனக்கு விட்ட இடத்தை பிடித்து தரும் என்று நம்புகிறார் ஆனந்தி.