இணைந்து நடிக்கும் தாயும், மகளும் | பிளாஷ்பேக் : வில்லுப்பாட்டு கச்சேரி நடத்தி குடும்பத்தை காப்பாற்றிய நடிகர் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை ஏமாற்றிய 'குமாரி' | ரஜினியை சந்தித்த சிம்ரன் | தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் | மருமகனுக்காக மாமா படம் தயாரிப்பாரா? | 2 வருடங்களுக்கு முன் காணாமல் போன மெமரி கார்டை கண்டுபிடிக்க சிறப்பு குழுவை நியமித்த ஸ்வேதா மேனன் | ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா |
காதல், கல்லூரி, வழக்கு எண் படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். இந்த படங்களுக்கு பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கிய யார் இவர்கள், ரா ரா ராஜசேகர் படங்கள் வெளிவரவில்லை. இதனால் நடிப்பின் பக்கம் கவனம் செலுத்தினார். அசுரன், வானம் கொட்டட்டும் படங்களில் நடித்தார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நீ நான் நாம் என்ற படத்தை பாலாஜி சக்திவேல் இயக்குகிறார். இதனை புளூமூன் கிரியேஷன் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. வீரா, சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்கள். எஸ்.கே.சுரேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஜாவீத் ரியாஸ் இசை அமைக்கிறார். காதல் படத்தை போன்று இது ஒரு உருக்கமான, உண்மையான காதல் கதை.